ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய ரீதியிலான செயற்திட்டம்…!
In ஆசிரியர் தெரிவு November 30, 2020 4:27 am GMT 0 Comments 1582 by : Jeyachandran Vithushan

ஐக்கிய தேசியக் கட்சியை புதுப்பிப்பதற்கான ஒரு தேசிய ரீதியிலான செயற்திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரியில் அறிவிக்கப்படும் என அக்கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் அவமானகரமான தோல்வியை எதிர்கொண்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மாவட்ட அடிப்படையிலான கட்சி ஆர்வலர்களுக்கு அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், எதிர்வரும் நாட்களில் இடம்பெரும் கலந்துரையாடல்களின்போது அவர்கள் தங்களின் கருத்துக்களையும் திட்டங்களையும் தெரிவிக்க முடியும் என்றும் கூறினார்.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் ஆசனத்திற்கு தனது பெயர் பரிந்துரைக்கப்பட்டதாக வெளியான செய்திகள் குறித்தும் ருவான் விஜேவர்தன கருத்து வெளியிட்டிருந்தார்.
கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பெயர் அதற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றும் அதை அவர் ஏற்க மறுத்தால், அந்த இடத்திற்கு தகுதியான கட்சியின் வேறு மூத்த உறுப்பினர்கள் உள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டுவரும் புனே மாநிலத்தில் உள்ள சீரம் நிறுவனத்தில் தீ
-
கொரோனா தடுப்பூசி திட்டத்தின் இரண்டாவது கட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர்களுக்கு த
-
நாடாளுமன்ற வரவு செலவு கூட்டத்தொடர் இந்த மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அதற்கு அடுத்த நா
-
மன்னார் பொது வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றினால்
-
அரசியல் மற்றும் நிர்வாகக் களங்களில் இராணுவத்தினரை அனுமதிப்பதன் ஊடாக ஜனநாயகம் அழிக்கப்பட்டு வருகின்றத
-
நடப்பு ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான ஏலம் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், அணி வீரர்களை தக்கவைப்பது,
-
வணிக விமானங்களுக்காக கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்பட்டதையடுத்து இன்று (வியாழக்கிழமை) 20 விமானங்
-
ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்டில் ஒரு கட்டடத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தினால், குறைந்தது மூன்று பேர் உ
-
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் பேச்சுவார
-
சிம்பாப்வே வெளியுறவுத் துறை அமைச்சர் சிபுசிஸோ மோயோ, கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்துள்