ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய அதிகாரிகள் குழு வியாழக்கிழமை பதவியேற்பு
In இலங்கை January 17, 2021 4:29 am GMT 0 Comments 1336 by : Dhackshala

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பதவிகளுக்கு அண்மையில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழு எதிர்வரும் வியாழக்கிழமை தங்களது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளது.
அன்றுமுதல் கட்சியை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான நடவடிக்கையை மேலும் விரிவுபடுத்த உள்ளதாக கட்சியின் புதிய செயலாளர் பாலித ரங்கே பண்டார ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைமையகமான சிறிகொத்தவை வழிநடத்தல் மையமாக அன்றைய தினம் பெயரிட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கட்சியின் முக்கிய பதவி நிலைகளுக்கான நியமனங்களை மேற்கொள்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கடந்த 13ஆம் திகதி கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் கூடியது.
இதன்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நியமிக்கப்பட்டார்.
அதேநேரம், முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன கட்சியின் தவிசாளராக நியமிக்கப்பட்டார்.
மேலும் பாலித ரங்கே பண்டார ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் ஏ.எஸ்.எம்.மிஸ்பா கட்சியின் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.