ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
In ஆசிரியர் தெரிவு November 9, 2020 8:18 am GMT 0 Comments 2157 by : Dhackshala
ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றின் வாயிலாக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசியல் பழிவாங்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியினை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ, நளின் பண்டார, ஜே.சீ.அலவத்துவல, மயந்த திசாநாயக்க மற்றும் சுஜித் சஞ்சய ஆகியோருக்கு எதிராகவே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
குறித்த ஐவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (திங்கட்கிழமை) முன்னிலையானபோதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரசியல் பழிவாங்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் நற்பெயருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டமைக்காக அவர்களை இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.