ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகம் கல்முனையில் திறப்பு!
In இலங்கை February 17, 2021 6:46 am GMT 0 Comments 1165 by : Vithushagan
ஐக்கிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தின் கல்முனைத்தொகுதிக்கான பிரதம அலுவலக திறப்பு விழா நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ். அப்துல் றஸாக்கின் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ,முஜிபுர் ரஹ்மான், இம்ரான் மஹ்ரூப், ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் எம்.ஏ.ஹசன் அலி உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது எதிர்வரும் காலங்களில் மாகாண சபை தேர்தல் உட்பட அரசியல் நிலவரங்கள் தொடர்பில் பல்வேறு நடவடிக்கைளை எடுப்பது என தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.