ஐப்பானியர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை

பெரும்பாலோர் எரிச்சலின் உச்சத்துக்குச் சென்று கன்னா பின்னாவென்று கத்துவதுண்டு. எரிச்சலூட்டும் சம்பவத்திலிருந்து மீளும் வழிதேடித் தங்கள் சக்தியை வீணடிப்பதுண்டு.
ஆனால், ஜப்பானியர்கள் அவற்றை வித்தியாசமான முறையில் அணுகுகிறார்கள். அப்படிப்பட்ட நேரங்களில் ‘shou ga nai’ என அவர்கள் கூறுவதுண்டு. அதன் பொருள் ‘இதைத் தவிர்க்க முடியாது’ என்பதாகும்.
எதிர்மறையாகத் தொனித்தாலும், ஒருவரது மனநலத்தை நன்றாக வைத்திருக்க அது உதவுகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
அந்த வார்த்தைகள் நிலைமையின் தாக்கத்தைக் குறைக்க உதவுகின்றன. மாற்ற இயலாததை அப்படியே ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை வளர்க்கின்றன.
போக்குவரத்து நெரிசல், நீண்ட வரிசையில் காத்திருப்பது போன்றவற்றால் எரிச்சலடையாத மனநிலையை அவை தருகின்றன.
சண்டை போட்டு சாதிக்கவேண்டியதை இப்படி விட்டுக்கொடுக்கிறார்களே என்று சில வெளிநாட்டினர் கருதுவதுண்டு. ஆனால், அது ஜப்பானியக் கலாசாரத்தின் தனிப்பட்ட அடையாளாங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இத்தகைய பொன்மொழிகள் உலகின் பல பாகங்களிலும் வழக்கத்தில் உள்ளன.
அமெரிக்கா:
‘நடந்தது நடந்துவிட்டது’ என்றும், ‘போகட்டும் விடு, அடுத்து ஆகவேண்டியதைப் பார்’ என்றும் பொருள்படும் வார்த்தைகள் பல அமெரிக்கர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துபவையாக இருக்கின்றன.
இங்கிலாந்து, பிரான்ஸ்:
‘அது அப்படித்தான்’ என்ற அர்த்தத்தில் வாசகங்கள் வழக்கில் உள்ளன.
ஐஸ்லாந்து:
‘எல்லாம் சரியாகும்’ என ஊக்கப்படுத்துகின்றனர்.
இத்தகைய பொன்மொழிகள் எல்லாமே எப்போது எதிர்த்துப் போராட வேண்டும்; எப்போது ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று பிரித்துணரும் பக்குவத்தை வளர்ப்பதாக நம்பப்படுகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.