பிரித்தானியா உடனான வர்த்தக ஒப்பந்தத்தில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கையெழுத்திட்டனர்!
In இங்கிலாந்து December 30, 2020 4:01 pm GMT 0 Comments 2144 by : Litharsan

பிரெக்ஸிற்றுக்குப் பின்னரான பிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளார்கள்.
ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களான உர்சுலா வொன் டெர் லெயன் மற்றும் சார்ளஸ் மைக்கேல் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதையடுத்து, பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கையெழுத்திடுவதற்காக ஒப்பந்த ஆவணங்கள் பிரித்தானியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
இந்த ஒப்பந்தம் ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ள நிலையில், பிரித்தானியாவுடனான உறவில் புதிய அத்தியாயம் தொடங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
பிரித்தானியா கடந்த ஜனவரியில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியிருந்த நிலையில் நாளை 31ஆம் திகதியுடன் ஐரோப்பிய ஒன்றியத்துடனான முறைசாரா உறுப்பினர் காலம் நிறைவடைகிறது.
இந்நிலையில், பிரெக்ஸிற்றுக்குப் பின்னரான, பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் பல மாதங்கள் இழுபறிக்குப் பின்னர் முடிவு எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.