ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் பயணத்தடை: பிரதமர் தலைமையில் அவசரக்கூட்டம்!
In இங்கிலாந்து December 21, 2020 8:50 am GMT 0 Comments 2137 by : Anojkiyan

பிரான்ஸ்- பிரித்தானியாவுக்கான எல்லையை 48 மணி நேரங்கள் மூடியதன் எதிரொலிக் காரணமாக, பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தலைமையில் அரசாங்கத்தின் அவசரக் குழுவின் கூட்டம் கூடவுள்ளது.
பிரித்தானியாவின் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு நிலவுவதால் இந்த நடவடிக்கை அவசியம் என்று பிரான்ஸ் கூறியது.
ஜேர்மனி, இத்தாலி, பெல்ஜியம், அயர்லாந்து குடியரசு, துருக்கி, கனடா உள்ளிட்ட நாடுகள் பிரித்தானிய விமானங்களை நிறுத்தி வைக்கின்றன.
சுவிஸ்லாந்தும் பிரித்தானிய விமானங்களை நிறுத்தி வைத்துள்ளது, மேலும் ஹொங்கொங் நள்ளிரவு முதல் தடை விதிக்கின்றது.
ஆஸ்திரியாவும் தடை விதிக்க உள்ளது. அதே நேரத்தில் பல்கேரியா, பிரித்தானியா புறப்படும் விமானங்களை நள்ளிரவு முதல் நிறுத்தி வைத்துள்ளது. பல நாடுகளில் குறுகிய கால நடவடிக்கைகளைப் போலன்றி, அதன் தடை ஜனவரி 31ஆம் திகதி வரை நீடிக்கும்.
இந்த நிலையில், ஒருங்கிணைந்த பதிலைப் பற்றி விவாதிக்க ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் பிரஸ்ஸல்ஸில் சந்திக்க உள்ளன.
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றுகள் ஞாயிற்றுக்கிழமை 35,928ஆக உயர்ந்தன. இது ஏழு நாட்களுக்கு முன்பு பதிவான எண்ணிக்கையை விட இரு மடங்காகும்.
நேர்மறை சோதனை செய்த 28 நாட்களுக்குள் மேலும் 326பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது, இது நாட்டின் மொத்தத்தை 67,401ஆகக் கொண்டு வந்தது.
சுகாதார செயலாளர் மாற் ஹான்காக், வைரஸின் புதிய மாறுபாடு 70 சதவீதம் அதிகமாக பரவக்கூடியதாக இருக்கலாம் என்று எச்சரித்தார்.
புதிய மாறுபாடு லண்டன் மற்றும் தென்கிழக்கு இங்கிலாந்தில் விரைவாக பரவியுள்ளது. ஆனால் இது மிகவும் கொடியது அல்லது தடுப்பூசிகளுக்கு வித்தியாசமாக செயற்படும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.