ஐரோப்பிய ஒன்றிய தலைவரை சந்தித்து பேசுகின்றார் பொரிஸ் ஜோன்சன்!
In இங்கிலாந்து December 9, 2020 9:32 am GMT 0 Comments 2211 by : Benitlas

பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவரை சந்தித்து பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மாநாடு நாளை(வியாழக்கிழமை) பிரசல்ஸ்சில் நடைபெறவுள்ளது.
இதன்போது ஐரோப்பிய ஒன்றித்தின் தலைவர் Ursula von der Leyen உடன் பொரஸ் ஜோன்சன் கலந்துரையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிகளை பின்பற்றுவதற்காக பிரித்தானியாவுக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் எதிர்வரும் 31ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.
விதிகள் தொடர்பில் ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டிருந்தாலும் அது குறித்து தீர்க்கமான முடிவுகள் எதுவும் இதுவரையில் எட்டப்படவில்லை.
இந்த நிலையிலேயே, மீன்பிடி உரிமைகள், வர்த்தக போட்டித் தன்மைக்கான விதிகள் தொடர்பில் பொரிஸ் ஜோன்சன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் Ursula von der Leyen ஆகியோருக்கு இடையில் பேச்சு நடத்தப்படவுள்ளது.
இரு நாட்டுத் தலைவர்களுக்கிடையில் ஆரோக்கியமான கலந்துரையாடல் இடம்பெற்றாலும், இறுதி உடன்படிக்கையை ஏற்படுத்துவது குறித்து அதிகாரிகள் தொடர்ந்தும் பேச்சுக்களை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.