ஐ.தே.க.இன் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ரணில் அறிவிப்பு?
In இலங்கை February 15, 2021 4:32 am GMT 0 Comments 1421 by : Dhackshala
ஐக்கியத் தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக, கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்காக அவரை பெயரிட வேண்டும் என ஐக்கியத் தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.
எனினும் ரணில் விக்ரமசிங்கவின் தீர்மானம் கிடைக்கும் வரையில் அந்த நடவடிக்கை தாமதமடைவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்த மாத இறுதிக்குள் குறித்த தீர்மானம் கட்சிக்கு அறியப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் ஒரே ஒரு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமை மாத்திரமே ஐக்கியத் தேசியக் கட்சிக்கு கிடைத்தது.
அந்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்காக பலரின் பெயர்கள் முன்னதாக முன்மொழியப்பட்டன.
இந்த நிலையில், அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பதவிகளுக்கு புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்காக கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பெயரிட வேண்டுமென்றும் இணக்கம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.