ஐ.நா. தீர்மானத்தின் அவசியம் குறித்து சம்பந்தன் விளக்கம்
In ஆசிரியர் தெரிவு April 7, 2019 2:33 am GMT 0 Comments 2834 by : Dhackshala
ஐ.நா. மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவதன் அவசியம் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கைக்கான ஐ.நா.வின் வதிவிடப் பிரதிநிதியிடம் தெளிவுபடுத்தியுள்ளார்.
இலங்கைக்கான ஐ.நா. வின் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு நேற்று (சனிக்கிழமை) கொழும்பில் இடம்பெற்றுள்ளது. இதன்போதே இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும் இந்த சந்திப்பின்போது சமகால அரசியல் நிலைமைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களை நடைமுறைபடுத்துவதில் உள்ள பிரச்சினைகள் குறித்தும், எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எடுத்துரைத்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான தீர்மானம் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட பின்னர், சில நாட்களுக்கு முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவையும், ஐ.நா.வின் வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
ஈழத்து பழனி என அழைக்கப்படும் பொகவந்தலாவ ஸ்ரீதண்டாயுதபாணி ஆலயத்தின் வருடாந்த அபிஷேகம் இன்று (செவ்வாய்
-
மக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைய ரொறொன்ரோவின் முதல் பெரிய தடுப
-
கொரோனா அச்சுறுத்தலால் அரசியல் கட்சியினர் பிரசாரம் மேற்கொள்ள தடை விதிக்கக் கோரிய மனுவை, உயர்நீதிமன்
-
வட கொரியாவுடனான உறவை அமெரிக்கா மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என தென்கொரியா ஜனாதிபதி மூன் ஜே இன் தெரிவ
-
கிளிநொச்சி- இரணைதீவு மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக விசேட கலந்துரையாடலொன்று வட.மாகாண ஆளுநர் தலைமையில
-
குடியரசு தின அணிவகுப்பில் ரஃபேல் போர் விமானங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந
-
சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை நாடாளுமன்றுக்கு அழைப்பது குறித்த
-
நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான சட்டங்கள் இயற்றப்படுவதில் இருக்கும் வெற்றிடத்தினால் நேர்மையான மக்கள் பிர
-
‘கிறிஸ்டோஃப்’ புயல் நெருங்கும்போது வடக்கு மற்றும் மத்திய இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு
-
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை சபைக்கு அழைக்கவில்லை என்றால் ஜனநாயக வழிகளிலும் போராட நாம் த