ஐ.பி.எல்.: பிளே ஓஃப்பிற்கான வாய்ப்பை தக்கவைக்குமா ஹதராபாத்?

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 54ஆவது லீக் போட்டியில், சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும், பெங்களூர் றோயல் செலஞ்சர்ஸ் அணியும் மோதவுள்ளன.
இன்று (சனிக்கிழமை) உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இப்போட்டியானது, பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்கு கேன் வில்லியம்சனும், பெங்களூர் அணிக்கு விராட் கோஹ்லியும் தலைமை தாங்கவுள்ளனர்.
இப்போட்டியை பொறுத்தவரை ஹைதராபாத் அணிக்கு இப்போட்டி மிக முக்கியமான போட்டியாக அமையவுள்ளது. இப்போட்டியில் மிகச் சிறந்த ஓட்ட வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி, வெற்றிபெற்றால் பிளே ஓஃப் சுற்றுக்கான வாய்ப்பை நெருங்க முடியும்.
ஆனால், பெங்களூர் றோயல் செலஞ்சர்ஸ் அணி அணி, ஏற்கனவே பிளே ஓஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துவிட்டது.
எனினும் இரு அணிகளிலும் மிகச் சிறந்த வீரர்கள் உள்ளதால், இப்போட்டி இரசிகர்களுக்கு உச்ச விறுவிறுப்பை பரிசளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று (புதன்கிழமை) பதவியேற்றுள்ளார். இந்தப் பதவியேற்ப நிகழ
-
கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனை அடுத்து க
-
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடைமுறையில் செயற்படுத்த முடிய
-
ஜோ பிடனின் பதவியேற்புக்கு முன்னதாக டொனால்ட் ட்ரம்ப் சற்று முன்னர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியுள
-
நாட்டில் மேலும் 379 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் சசிகலாவிற்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வ
-
கொரோனா தொற்றினால் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க இடமளிக்க முடியாது என்றும் அடிப்படை வசதி
-
திருகோணமலையில், வீதியோர வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, வியாபாரிகளால் ஆர்ப்பாட்டமொன்று
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 215 ஆக உயர்ந்துள்ளது.
-
நீதிபதிகளின் தீர்ப்புகள் குறித்து பேசுவதற்கு நாடாளுமன்றில் உள்ள 225 பேருக்கும் அதிகாரம் உள்ளது என நா