ஐ.பி.எல். ரி-20 தொடர்: ராஜஸ்தான் அணிக்கு பதிலடி கொடுக்குமா மும்பை?

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 36ஆவது லீக் போட்டியில், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளன.
உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ள இப்போட்டியில், ராஜஸ்தான் அணிக்கு அஜிங்கிய ரஹானேவும், மும்பை அணிக்கு ரோஹித் சர்மாவும் தலைமை தாங்கவுள்ளனர்.
இப்போட்டியை பொறுத்தவரை இப்போட்டி, இரு அணிகளுக்குமே மிக முக்கியமான போட்டியாக அமையவுள்ளது.
ராஜஸ்தான் அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 6 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது.
இந்த அணி, அடுத்த சுற்றான பிளே ஒஃப்சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் எஞ்சியுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதேபோல, மும்பை அணி இது வரை 9 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 3 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது.
இன்றைய போட்டியில், மும்பை அணி வெற்றிபெறும் பட்சத்தில் பிளே பிஃப் சுற்றைநெருங்கும் வாய்ப்பினை பெறும்.
ஏற்கனவே நடப்பு தொடரில் இரு அணிகளும் மோதிக்கொண்ட முதல் போட்டியில், மும்பை அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வீழ்த்தியிருந்தது.
ஆகையால் இன்றைய போட்டியில், ராஜஸ்தான் அணியின் இரண்டாவது வெற்றி தொடருமா அல்லது மும்பை அணி பதிலடி கொடுக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.