ஐ.பி.எல். ரி-20 லீக் தொடர்: விறுவிறுப்பான செய்திகளின் தொகுப்பு

இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல். ரி-20 லீக் தொடர், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது.
இந்த தொடரின் ஒவ்வொரு போட்டிகளுமே இரசிகர்களை மகிழ்வித்து வருகின்றது என்றால் அது மிகையாகாது.
இதற்கிடையில் இத்தொடரில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள், அவ்வப்போது உபாதைக்குள்ளாகின்றனர். ஆகையால் அவர்களுக்கு பதிலாக பல வீரர்களும் உள்வாங்கப்படுகின்றனர்.
மேலும், பல சானைகள் பதிவு செய்யப்படுகின்றன. வீரர்களுக்குள் முரண்பாடுகள், வீரர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகின்றன.
இந்நிலையில், இதுபோன்ற செய்திகள் குறித்து அறிந்துக் கொள்ள இரசிகர்கள் ஆவலாக உள்ளனர். அவ்வாறான செய்திகளை தற்போது பார்க்கலாம்,
மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோஹித் சர்மா, களத்தில் நடுவருடன் வாதம் செய்து, விக்கெட்டை தட்டியதால், அவருக்கு எச்சரிக்கையுடன் கூடிய அபராதத்தை ஐ.பி.எல் நிர்வாகம் விதித்துள்ளது.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கெதிராக நேற்று நடைபெற்ற போட்டியில், ரோஹித் சர்மா 3 பவுண்டரிகள் உட்பட 13 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
குர்னே வீசிய 4ஆவது ஓவரின் போது ரோஹித் சர்மா கால்காப்பில் பந்தை வாங்கியதால், நடுவர் எல்.பி.டபிள்யு அளித்ததால், ஆட்டமிழந்தார்.
ஆனால், அது குறித்து ரோஹித் சர்மா நடுவரிடம் வாக்குவாதம் செய்தது மட்டுமல்லாமல், செல்லும் போது தனது துடுப்பாட்ட மட்டையால், விக்கெட்டை தட்டிவிட்டுச் சென்றார்
ஒரு அணியின் அணியின் இதுபோன்று ஒழுக்கக் குறைவாக நடந்து கொண்டது பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. போட்டி முடிந்தவுடன் இதுதொடர்பாக களநடுவர்கள் இருவரும் போட்டி நடுவரிடம் ரோஹித் சர்மா செயற்பாடு குறித்து புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் ரோஹித் சர்மாவிடம், போட்டி நடுவர் நடத்திய விசாரணையின்போது தனது தவறை ரோஹித் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அணியின் தலைவர் ஒழுக்கக்குறைவாக நடந்து கொள்ளக்கூடாது என்று எச்சரித்த போட்டி நடுவர், ரோஹித் சர்மாவுக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவீதத்தை அபராதமாக விதித்தார்.
இது தொடர்பாக ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ‘மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவர் ரோஹித் சர்மா, ஐ.பி.எல் போட்டி விதிமுறைகளை மீறி பதினொன்றில் ஒன்று குற்றத்தைச் செய்துள்ளார். ரோஹித் சர்மாவின் செயல் ஒழுக்கக் குறைவானது என்பதை அவர் ஒப்புக்கொண்டார். ஆதலால், அவருக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம்விதிக்கப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், பந்துவீசுவதற்கு அதிகநேரம் எடுத்துக்கொண்டதற்காக ரோஹித் சர்மாவுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
………………
மும்பை இந்தியன்ஸ் அணி, நேற்று கொல்கத்தா நைட் ரைடஸ் அணியை ஈடன் கார்டன் மைதானத்தில் எதிர்கொண்டது.
இந்த போட்டி ரோஹித் சர்மாவு மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக பணியாற்றிய 100ஆவது போட்டியாகும். இதன்மூலம் ஒரு அணியின் தலைவராக 100 போட்டிகளில் பங்கேற்ற வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இதற்குமுன் கொல்கத்தா அணியின் முன்னாள் தலைவரான கௌதம் கம்பீர், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் டோனி, றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவர் விராட் கோஹ்லி ஆகியோர் 100 போட்டிகளுக்கு மேல் அணித்தலைவராக பணியாற்றியுள்ளனர்.
……………..
நடப்பு ஐ.பி.எல். தொடரில் பேசும் வீரராக உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சகலதுறை வீரர் ஆந்ரே ரஸ்ஸல், புதிய சாதனையை படைத்துள்ளார்.
ஐ.பி.எல். தொடரில் 50 சிக்ஸர்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை ஆந்ரே ரஸ்ஸல், பெற்றுள்ளார்.
இவர் நடப்பு தொடரில் 12 போட்டிகளில் விளையாடி இதுவரை 50 சிக்சர்கள் அடித்துள்ளார். இதன்மூலம், ஒரு தொடரில் 50 சிக்சர்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற முத்திரையை அவர் படைத்தார்.
இதற்கு முன்னதாக கிறிஸ் கெய்ல் இரண்டு முறை இந்த சாதனையை படைத்துள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டு 59 சிக்ஸர்களும், 2013ஆம் ஆண்டு 51 சிக்ஸர்களும் அடித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.