ஒக்ரோபருக்கு முன்னர் பிரித்தானியா விலகிவிடுமென பிரதமர் நம்பிக்கை!
In இங்கிலாந்து May 1, 2019 4:09 pm GMT 0 Comments 2375 by : shiyani

ஐரோப்பிய ஒன்றியத்தால் தற்போது வழங்கப்பட்டுள்ள ஒக்டோபர் 31 ஆம் திகதி காலக்கெடுவுக்கு முன்னதாகவே ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா விலகமுடியுமென தாம் நம்புவதாக பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.
பிரெக்ஸிற் உடன்படிக்கை ஒன்றை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்தால் உடனடியாகவே ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேற்றுவது சாத்தியம் எனவும் மே தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே மூன்றுமுறை பாராளுமன்ற உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்ட பிரெக்ஸிற் ஒப்பந்தத்துக்கு தொழிற்கட்சியின் ஆதரவும் கிடைக்கப் பெற்றவுடன் மீண்டும் வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்படுமெனவும் மே தெரிவித்தார்.
பிரெக்ஸிற் தொடர்பாக பாராளுமன்றத்தில் நிலவும் முட்டுக்கட்டையை முறியடிக்கும் நோக்கத்துடன் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்துடனான சுங்க ஒன்றியம் குறித்த இருகட்சியினரது குறிக்கோள்களும் ஒரேமாதிரியானவை தான் எனவும் வெகுவிரைவில் தீர்வொன்றை எட்டமுடியுமென தாம் நம்புவதாகவும் பிரதமர் பாராளுமன்றத்தில் கூறினார்.
பிரெக்ஸிற் தொடர்பாக நாட்டில் நிலவும் நிச்சயமற்ற தன்மை வெகுவிரைவில் முடிவுக்கு வரவேண்டுமென கூறிய பிரதமர் நிச்சயமாக ஒப்பந்தமொன்று எட்டப்படுமெனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.