ஒன்று கூடல்களை தவிர்த்து வீடுகளில் இருந்து இம்முறை தீபாவளியை கொண்டாடுங்கள் – க. மகேசன்
In இலங்கை November 11, 2020 4:26 am GMT 0 Comments 1302 by : Vithushagan
ஒன்று கூடல்களை தவிர்த்து வீடுகளில் இருந்து இம்முறை தீபாவளியை கொண்டாடுங்கள் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போதைய யாழ்மாவட்ட நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “கொரோனா தொற்று இலங்கையில் மிக தீவிரமாக பரவி வரும் நிலைமை காணப்படுகின்றது மேல் மாகாணத்திலிருந்து அனைத்து மாகாணங்களுக்கும் அனைத்து மாவட்டங்களுக்கும் தொற்று பரவிவருக்கின்றது.
சுகாதார நடைமுறைகளை சரியாக பின்பற்றி தங்களுடைய அன்றாடசெயற்பாடுகளை செயற்படுத்திக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் தற்போது பண்டிகை காலமாக இருக்கின்ற படியால் அதாவது தீபாவளி பண்டிகை அதேபோல் கந்தசஷ்டி விரதம் மற்றும் இந்துக்களின் கௌரி காப்பு விரதம் என்பன தற்காலத்தில் இடம்பெறவுள்ளமையால்
மக்கள் அதிகளவில் ஒன்று கூடாமல் தங்களுடைய வழிபாடுகளை வீடுகளில் இருந்தவாறு செய்வது மிகப் பொருத்தமானதாக இருக்கும் .மேலும் இந்த பண்டிகைக்காலத்தில் வழமைபோன்று வர்த்தக நிலையங்களுக்குச் சென்று பொருட்கொள்வனவு செய்வது போன்ற விடயங்களில் ஈடுபடுவோர் அவற்றை மிக கவனமாக செயற்படுத்த வேண்டும்.
அதிகமாக ஒன்று கூடாது தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணம்அதாவது குடும்பத்தில் ஒரிருவர் மட்டும் சென்று தங்களுடைய அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து பொருட்களை கொள்வனவு செய்யுங்கள்.
தற்பொழுது அங்காடி வியாபாரம் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது மேலும் வர்த்தக நிலையங்களிலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றியே வர்த்தக நடவடிக்கைகள் செயற்படுத்தப்படுகின்றது .
ஆகவே மாவட்டத்தின் சீரான இயக்கத்திற்கும மக்களுடைய மேலான ஒத்துழைப்பு மிகவும் அவசியம் ஆகவே இந்த கொரோனா காலத்தில் சமூக இடைவெளியை பின்பற்றி இந்த பண்டிகைக்கான பொருள் கொள்வனவு மற்றும் பண்டிகை கொண்டாடுவதை மிக அவதானமாக செய்ய வேண்டும் என இந்த சந்தர்ப்பத்திலே வினயமாக கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.