ஒப்பந்தம் எட்டப்படவில்லை: பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் விடுத்துள்ள அறிவிப்பு!
In இங்கிலாந்து December 11, 2020 5:29 pm GMT 0 Comments 2205 by : Litharsan

வர்த்தக ஒப்பந்தம் இல்லாமல் இன்னும் மூன்று வாரங்களில் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் ஆகியோர் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
பிரித்தானியா கடந்த ஜனவரியில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியிருந்த நிலையில் வரும் டிசம்பர் 31ஆம் திகதி வரை ஐரோப்பிய ஒன்றியத்துடன் முறைசாரா உறுப்பினராக உள்ளது
இந்நிலையில், பிரெக்ஸிற்றுக்குப் பின்னரான, பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
இந்நிலையில், இதுகுறித்து இன்று கருத்துத் தெரிவித்துள்ள ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர், கடும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியிலும் எந்தவொரு ஒப்பந்தமும் சாத்தியப்படுவதாகத் தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள பிரதமர் பொரிஸ் ஜோன்சன், முடிவுகள் எட்டப்பட வேண்டுமானால், மீன்பிடி உரிமைகள் மற்றும் வர்த்தக நடைமுறைகளின் முக்கிய அம்சங்களில் ஐரோப்பிய ஒன்றியம் ஒரு பெரிய மாற்றத்தைச் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வரும் 31ஆம் திகதிக்குள் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை இரு தரப்பினரும் எட்டவில்லை என்றால், வர்த்தக நடைமுறைகள் மாற்றமடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.