ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணிகளின் தரவரிசைப் பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.
சிறப்பாக விளையாடும் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டு வருகிறது.
அதன்படி, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணிகளின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.
இந்த தரவரிசைப் பட்டியலில், ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்தும், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவும் முதலிடத்தில் உள்ளன.
சரி தற்போது ஒருநாள் கிரிக்கெட் அணிகளின் தரவரிசைப் பட்டியலில் முதல் பத்து இடங்களில் உள்ள அணிகளின் விபரங்களை பார்க்கலாம்,
இந்த பட்டியலில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 123 மதீப்பிட்டு புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியா அணி 121 மதீப்பிட்டு புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், தென்னாபிரிக்கா 115 மதீப்பிட்டு புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
நியூஸிலாந்து அணி 113 மதீப்பிட்டு புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், அவுஸ்ரேலியா 109 மதீப்பிட்டு புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும், உள்ளன.
தொடர்ந்து, பாகிஸ்தான் அணி 96 மதீப்பிட்டு புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும், பங்களாதேஷ் 86 மதீப்பிட்டு புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும், மேற்கிந்திய தீவுகள் அணி 80 மதீப்பிட்டு புள்ளிகளுடன் எட்டாவது இடத்திலும் உள்ளன.
76 மதீப்பிட்டு புள்ளிகளுடன் இலங்கை ஒன்பதாவது இடத்திலும், 64 மதீப்பிட்டு புள்ளிகளுடன் ஆப்கானிஸ்தான் அணி பத்தாவது இடத்திலும் உள்ளன.
…………
அடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட் அணிகளின் தரவரிசைப் பட்டியலில் முதல் பத்து இடங்களில் உள்ள அணிகளின் விபரங்களை பார்க்கலாம்,
இப்பட்டியலில் இந்தியக் கிரிக்கெட் அணி, 113 மதீப்பிட்டு புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 111 மதீப்பிட்டு புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், தென்னாபிரிக்கா 108 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி 105 மதீப்பிட்டு புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், அவுஸ்ரேலியா 98 மதீப்பிட்டு புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன
இலங்கை அணி 94 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும், பாகிஸ்தான் அணி 84 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும் உள்ளன.
மேலும், விண்டிஸ் அணி 82 புள்ளிகளுடன் எட்டாவது இடத்திலும், பங்களாதேஷ் 65 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 25 புள்ளிகளுடன் பத்தாவது இடத்திலும் உள்ளன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.