ஒரு இலட்சம் இளம் தொழில் முனைவோருக்காக காணி – தென்மராட்சியில் 13ஆயிரம் விண்ணப்பம்!
In இலங்கை November 18, 2020 6:11 am GMT 0 Comments 1448 by : Vithushagan

ஒரு இலட்சம் இளம் தொழில் முனைவோருக்காக காணி வழங்குவது தொடர்பாக கோரப்பட்ட விண்ணப்பத்திற்கு தென்மராட்சி பிரதேச செயலகத்தில் மாத்திரம் 13ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
ஒரு இலட்சம் இளம் தொழில் முனைவோருக்கு காணி வழங்கும் முகமாக அரசாங்கத்தால் விண்ணப்பங்கள் கோரப்பட்டன. அதற்கு கடந்த 16ஆம் திகதி முடிவு திகதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்நிலையில் காணிகளை பெற்றுக்கொள்வதற்காக தென்மராட்சி பிரதேச செயலகத்தில் மாத்திரம் 13 ஆயிரத்து 311 இளையோர் விண்ணப்பங்களை கையளித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.