ஒரு இலட்சம் மரக்கன்றுகள் வழங்கும் செயற்றிட்டம்
In இலங்கை February 22, 2021 4:33 am GMT 0 Comments 1189 by : Yuganthini

‘மண்ணுக்குப் பரிசளிப்போம் மண் நமக்கு மட்டுமல்ல நமது சந்ததிக்கும் பரிசளிக்கும். எமது காலத்தில் எமது மண்ணையும் வளத்தையும் பாதுகாப்போம்’ எனும் தொனிப்பொருளில் ஒரு இலட்சம் மரக்கன்றுகள் வழங்கும் பசுமைப்புரட்சி செயற்றிட்டம், வன்னி தமிழ் மக்கள் ஒன்றியம் என்ற அமைப்பினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
ஒரு இலட்சம் பயன்தரும் மரங்களை இலக்கு வைத்து வாழ்வாதார பசுமைப் புரட்சியை ஏற்படுத்தும் குறித்த செயற்றிட்டம், கிளிநொச்சி மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைத் தொடர்ந்து வவுனியா மாவட்டத்திலும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக இன்றைய தினம் நெடுங்கேணி கற்பகா அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு சுமார் 100 பயன்தரும் பல்வேறு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இதேவேளை யாழ்.மாவட்டத்திலும் இவ்வமைப்பினால் இவ்வாறான செயற்பாடுகள் இதன் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.