ஒரு நாட்டின் இறையாண்மையையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் மற்ற நாடுகள் மதித்து நடக்க வேண்டும் – மோடி
In இந்தியா November 11, 2020 7:20 am GMT 0 Comments 1434 by : Krushnamoorthy Dushanthini

குறிப்பிட்ட நாட்டின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் மற்ற நாடுகள் மதித்து நடக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் காணொளிவாயிலாக கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ இந்தியா ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளுடன் கலாசார ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் இந்தியா நல்லுறவைப் பேணி வருகிறது.
மற்ற நாடுகளின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் மதித்து வளா்ச்சிப் பாதையில் ஒருங்கிணைந்து முன்னேறுவதை நோக்கமாகக் கொள்ள வேண்டும்.
தற்போதைய சூழலில் உலக நாடுகள் பல்வேறு பிரச்சினைகளை எதிா்கொண்டு வருகின்றன. அவற்றுக்குத் தீா்வு காண்பதற்கு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு அதிகரிக்க வேண்டும். அனைத்துத் துறைகளிலும் தன்னிறைவு பெற்று உலக நாடுகளின் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கு இந்தியா உறுதுணையாக இருக்கும்.
கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா முன்னின்று வருகிறது. இத்தகைய இக்கட்டான சூழலில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா விநியோகம் செய்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.