ஒரே நாடு ஒரே இனம் – யாழில் சுதந்திரக் கட்சியினர் பேரணி
In இலங்கை February 4, 2021 8:13 am GMT 0 Comments 1668 by : Dhackshala
ஒரே நாடு ஒரே இனம் என கோஷம் எழுப்பியவாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒரு குழுவினர் யாழ்ப்பாணத்தில் சுதந்திர தின பேரணியை நடத்தினர்.
இந்தப் பேரணியின் நிறைவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர பங்கேற்று யாழ்ப்பாணம் பொது நூலக முகப்பில் விளக்கேற்றிவைத்தார்.
யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்தில் ஆரம்பமான பேரணி கோட்டையை சுற்றி ஏ-9 வீதிச் சந்தி ஊடாக கே.கே.எஸ். வீதியில் பயணித்து சத்திரச்சந்தியால் வைத்தியசாலை வீதியால் பயணித்து யாழ்ப்பாணம் பொது நூலகத்தை சென்றடைந்தது.
2020 ஓகஸ்ட் பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அங்கஜன் இராமநாதன் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர் பட்டியலில் இருந்த அருண் இந்தப் போராட்டத்தையும் தலைமையேற்று நடத்தியிருந்தார்.
இலங்கையின் சுதந்திர தினத்தை வடக்கு – கிழக்கில் கரிநாளாகப் பிரகடனத்தி தமிழ் மக்கள் பல்வேறு வாழ்வுரிமை – நீதிப் போராட்டங்களை முன்னெடுத்துள்ள நிலையில், இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் மக்களின் எழுச்சிப் போராட்டத்துக்கு கொவிட் -19 தொற்றுநோயைக் காரணம் காட்டி நீதிமன்றத் தடை உத்தரவு பெற்று தடுக்க முற்பட்ட பொலிஸார், இந்தப் பேரணிக்கு அனுமதியளித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.