‘ஒரே நாடு ஒரே மக்கள்’ என்ற கோட்பாட்டை வலியுறுத்தும் வகையில் வரவு செலவு திட்டம் அமைந்துள்ளது – டக்ளஸ்
In இலங்கை November 18, 2020 4:42 am GMT 0 Comments 1388 by : Vithushagan

சுயபொருளாதாரக் கொள்கையை வலுப்படுத்தும் வகையில் வரவு செலவு திட்டம் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாட்டின் அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையில் ‘ஒரே நாடு ஒரே மக்கள்’ என்ற கோட்பாட்டை வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
நாடாளுமன்றில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று( செவ்வாய்க்கிழமை) சமர்ப்பிக்கப்பட்ட 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கடற்றொழில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், கொவிட் 19 ஏற்படுத்தியிருக்கின்ற பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் பாரபட்சமற்ற – ஏற்றத்தாழ்வுகள் அற்ற முறையில் நாட்டின் அனைத்து தரப்பினரையும் கவனத்தில் கொண்டு குறித்த வரவு செலவுத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
குறிப்பாக, தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தினை 1000 ரூபாயாக அதிகரித்தல் மற்றும் நுண்கடன் நிறுவனங்களைக் ஒழுங்குபடுத்தும் வகையிலான பரிந்துரை போன்ற விடயங்கள் குறித்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளமை, சிறுபான்மை மக்களுக்கு பொருளாதார தாக்கங்களையும் – அழுத்தங்களையும் ஏற்படுத்தகின்ற காரணிகள் தொடர்பாகவும் அவதானம் செலுத்தப்பட்டிருப்பதை வெளிப்படுத்துவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.