ஓய்வுபெறவுள்ள பிரதம நீதியரசர் நளின் பெரேராவிற்கு பிரியாவிடை

ஓய்வுபெறவுள்ள பிரதம நீதியரசர் நளின் பெரேராவிற்கு பிரியாவிடை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. உயர் நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் உயர் நீதிமன்ற நீதிபதிகள், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள், நீதவான் நீதிமன்ற நீதிபதிகள், சட்டத்தரணிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது, பிரதம நீதியரசர் நளின் பெரேராவின் சேவைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தவருடம் ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி பிரதம நீதியரசராக நளின் பெரேரா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அரசியலமைப்பு சபையின் தீர்மானத்துக்கு அமைய நியமிக்கப்பட்டார்.
பிரதம நீதியரசராக பதவியேற்ற பின்னர் நளின் பெரேரா பல முக்கிய தீர்ப்புக்களை வழங்கியிருந்தார். அதில் கடந்த ஆண்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்ட விரோதமானது என பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையிலான ஏழு பேர் கொண்ட நீதியரசர்கள் குழு அளித்த தீர்ப்பு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
பிரதம நீதியரசர் நளின் பெரேரா எதிர்வரும் 28ஆம் திகதியுடன் ஓய்வு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.