கடந்த 24 மணித்தியாலங்களில் கொழும்பில் மட்டும் 309 பேருக்கு கொரோனா
In இலங்கை December 16, 2020 4:57 am GMT 0 Comments 1578 by : Dhackshala

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவர்களில், கொழும்பு மாவட்டத்தில் 309 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 104 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் இருவரும் அம்பாறை மாவட்டத்தில் நால்வரும் புத்தளம் மாவட்டத்தில் ஒருவரும் மட்டக்களப்பில் ஒருவரும் திருகோணமலை மாவட்டத்தில் ஒருவரும் மன்னார் மாவட்டத்தில் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 309 பேரில் கிருலப்பனையில் 14 பேரும் வௌ்ளவத்தையில் 19 பேரும் பொரளையில் 24 பேரும் தெமட்டகொடையில் 11 பேரும் மருதானையில் 25 பேரும் புளூமென்டல் பகுதியில் 13 பேரும் கிரேண்ட்பாஸ் பிரதேசத்தில் 69 பேரும் மட்டக்குளியில் 62 பேரும் புறக்கோட்டையில் ஒருவரும் உள்ளடங்குகின்றனர்.
கம்பஹா மாவட்டத்தின் வத்தளையில் 06 பேரும் களனியில் நால்வரும் மினுவாங்கொடையில் இருவரும் மஹர பகுதியில் 68 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 121 ஆக அதிகரித்துள்ளதோடு, தொற்றிலிருந்து 24 ஆயிரத்து 867 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.