கடல், சாலை என அனைத்து இடங்களிலும் தாமரையே மலரும்- தமிழிசை

கடல், சாலை என அனைத்து இடங்களிலும் தாமரையே மலரும் என தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடியில் இன்று (வியாழக்கிழமை) திறந்த வாகனத்தில் நின்றபடி பிரசாரம் மேற்கொண்டார். இதன்போது அவர் பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்துடன், தி.மு.க.வால் முடியாதது என்னால் முடியும். உப்பு நீர் இங்குள்ள மக்களின் உயிர் நீராக உள்ளது. அந்த உயிர் நீரில் தாமரை நிச்சயமாக மலரும் என அவர் கூறினார்.
மேலும், கனிமொழிக்கே தூத்துக்குடி புதிய இடம் என்றும் தான் இந்த மண்ணின் மகள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
2019 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் தமிழக சட்டசபை இடைத்தேர்தல் ஆகியவற்றை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன.
ஆளும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பாரதீய ஜனதா கட்சி இடம் பெற்றுள்ளது. அக்கட்சியின் தமிழக தலைவரான தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் கனிமொழி போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்
-
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் அடையாளம் காணப்பட்ட 3 கொரோனா தொற்று நோயாளிகளில் ஒருவர
-
நாட்டில் மேலும் 332 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
அமெரிக்காவிற்குள் நுழையும் முனைப்புடன் சென்ற மத்திய அமெரிக்க புகலிடக்கோரிக்கையாளர்கள் மீது குவாத்தமா
-
ரஜினி மக்கள் மன்றத்தினர் அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியிலும் இணைந்து கொள்ளலாம் என்று அறி
-
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் நாளைமறுதினம்(புதன்கிழமை) பதவியேற்கவுள்ள நிலையில், தலைநகரம்
-
அடுத்த இரு வாரங்களுக்குள் மேல் மாகாணத்தில் அனைத்து தர மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பி
-
பாலாஜியின் உண்மை முகமும், மாற்றிக்கொள்ளும் குணமும் என்னை கவர்ந்தது என இயக்குனரும், நடிகருமான சேரன் த
-
நுவரெலியா – கந்தப்பளை, பார்க் தோட்டத்தில் நேற்றிரவு முதல் பெருந்தோட்டத் தொழிலாளர்களினால் மேற்க
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 45 ஆயிரத்து 820 ஆக உயர்ந்துள்ளது.