கடும் வறட்சியினால் 56 ஆயிரம் பேர் பாதிப்பு!

நாடளவிய ரீதியில் நிலவி வரும் கடும் வறட்சியுடனான காலநிலை காரணமாக 56 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இடர்முகாமைத்துவ நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இதனைத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், வவுனியா, புத்தளம், கேகாலை, மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலுள்ள மக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணைங்களை வழங்குவதற்காக, பிரதேச செயலாளர் பிரிவுகளினூடாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வறட்சி நிலவும் பகுதிகளில், குடிநீருக்குத் தட்டுப்பாடு நிலவும் பட்சத்தில், கிராம உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்குமாறும் அவர் கோரியுள்ளார்.
இது தொடர்பாக 117 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பினை ஏற்படுத்தி தகவல்களை வழங்க முடியும் எனவும் இடர்முகாமைத்துவ நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
அத்துடன், வறட்சியுடனான வானிலையுடன், வனப்பகுதிளுக்கு தீ மூட்டும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள எல்லைப் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முற்பட்டதாக இந்
-
கொரோனா தொற்று உறுதியாகிய சிறைச்சாலைகளுடன் தொடர்புடைய 151 பேர் தற்போது தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வர
-
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வவுனியா நகரில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங
-
விண்வெளித் தொழில்நுட்பத்தில் உச்சத்தில் இருக்கும் எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், புதிய சாதனையைப
-
பாணந்துறை வடக்கு பொலிஸ் பகுதியில் உள்ள பள்ளிமுல்லைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர
-
வடக்கு சீனாவில் விபத்துக்குள்ளான தங்க சுரங்கத்தில் சிக்கிய 22 பேரில் 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள
-
முல்லைத்தீவு- முள்ளியவளை பகுதியில் அமைந்துள்ள தேசிய பாடசாலையான வித்தியானந்தா கல்லூரியின் மைதான புனரம
-
நாட்டின் பெரும்பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டதை அடுத்து பிரித்தானியாவின் பெரும்பகுதி முழுவத
-
நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நெருக்கடி காரணமாக ஒரு வருடத்திற்கு எந்த தேர்தலும் நடைபெறாது என இராஜாங
-
கிழக்கு லடாக் எல்லையில் படைகளைத் திரும்பப் பெறுவது தொடா்பாக இந்தியா, சீனாவுக்கிடையே மீண்டும் பேச்சுவ