கண்டியில் ஏற்பட்ட நில அதிர்வு குறித்த ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு
In இலங்கை November 25, 2020 2:46 am GMT 0 Comments 1448 by : Dhackshala

கண்டி மாவட்டத்தின் சில பகுதிகளில் உணரப்பட்ட நில அதிர்வு தொடர்பான நிபுணர்களின் ஆய்வறிக்கை சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கண்டி, அளுத்வத்தை, அம்பாங்கோட்டை, திகன, மயிலப்பிட்டி, அனுரவத்தை, ஹரவத்தை முதலான பிரதேசங்களில் கடந்த 18ஆம் திகதி இந்த நில அதிர்வு உணரப்பட்டிருந்தது.
குறித்த பகுதிகளில் இதற்கு முன்னரும் நில அதிர்வு பதிவாகியிருந்த நிலையில், இது குறித்து ஆராய்வதற்காக ஆறு பேர் அடங்கிய நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
அந்தக் குழுவான நீண்ட ஆய்வுகளின் அடிப்படையில் தமது அறிக்கையை விடயத்துடன் தொடர்புடைய அமைச்சரிடம் நேற்று கையளித்துள்ளது.
குறித்த பகுதிகளில் உள்ள சுண்ணாம்பு கற்பாறைகளில் ஏற்பட்ட வெடிப்பினால் இந்த அதிர்வு ஏற்பட்டதாக கூற முடியாது என நிபுணர் குழு தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குறித்த நில அதிர்வு தொடர்பில், தொடர்ந்தும் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நிபுணர்குழு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், குறித்த பகுதியில் உள்ள பொதுமக்களினதும் நீர்த்தேக்கங்களினதும் பாதுகாப்பு கருதி, செயற்படுத்தப்பட வேண்டிய சில பரிந்துரைகளையும் நிபுணர்குழு முன்வைத்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.