கண்டியில் மீண்டும் நில நடுக்கம் பதிவு
In இலங்கை December 6, 2020 8:45 am GMT 0 Comments 1561 by : Dhackshala

கண்டி – திகன பிரதேசத்தில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) சிறிய அளவான நில நடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கத்தொழில் பணிமனை உறுதிப்படுத்தியுள்ளது.
இன்று அதிகாலை 5.42 மணியளவில் பதிவாகிய இந்த நில நடுக்கம், ரிக்டர் மானியில் 2 மெக்னிரியூட் அளவில் பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னர் கடந்த மாதம் 18ஆம் திகதியும் இந்த பிரதேசத்தில் 2 மெக்னிரியுட் அளவில் நில அதிர்வொன்று பதிவாகி இருந்ததுடன், அதற்கு முன்னரும் அந்த பகுதியில் பல சந்தர்ப்பங்களில் நில நடுக்கங்கள் பதிவாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.