”கண் முன்னால் மக்கள் இறப்பதைக் கண்டேன்” – குண்டுவெடிப்பை நேரில் கண்டவர்
கொழும்பு புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அருகில் வசிக்கும் மக்கள், அங்கு இடம்பெற்ற குண்டுவெடிப்பு குறித்து பதற்றத்துடன் கருத்துக்களை பதிவுசெய்துள்ளனர்.
ஈஸ்டர் ஆராதனையின்போது நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் மொத்தமாக 290இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
முதலாவது குண்டுவெடிப்பு இடம்பெற்ற புனித அந்தோனியார் ஆலயத்தை அண்டிய குடியிருப்பில் வாழும் 29 வயதான எரிக்சன் அருள்நேசன் இவ்வாறு கூறுகிறார். ”இது மிகவும் வேதனையான சம்பவம். என் கண் முன்னால் மக்கள் இறப்பதை கண்டேன். இரத்தத்தைக் கண்டேன். மக்களின் கை, கால்கள் உள்ளிட்ட உறுப்புகளை தனித்தனியாக கண்டேன். இச்சம்பவம் என்னை கோபப்படுத்தவில்லை. மிக மிக வேதனையை தருகின்றது” என்றார்.
அத்தோடு, 60 வயதான டேவிட் அன்டனி என்பவர் குறிப்பிடுகையில், ”இந்த இடத்தை தவிர வேறொன்றும் இல்லை. நாம் இங்குதான் வாழ வேண்டும்” என்றார்.
கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றதோடு, இன்றும் சில இடங்களில் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டன. இந்நிலையில், இன்று இரவு முதல் அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
அல்பர்ட்டாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) கட்டுப்பாடுகள் தொடரும் என டாக்டர் தீனா ஹின்ஷா தெரிவித்துள்ளா
-
பசிபிக் பெருங்கடல் அருகே அமைந்துள்ள பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
-
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விட்டுக்கொடுப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும்
-
ஐக்கிய மக்கள் சக்தியின் 2021 ஆம் ஆண்டுக்கான புதிய உறுப்பினர்கள் குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளிய
-
யாழ்ப்பாணம், சுன்னாகம் கந்தரோடை வற்றாக்கை அம்மன் கோயில் புராதன தீர்த்தக் கேணியை அண்டியுள்ள அரச மரம்
-
தாம் எப்போதும் பேய்களுக்குப் பயப்படுவதில்லை எனவும், ஆகவே தமக்கு அரசாங்கத்திற்குப் பயமில்லை என்றும் ஜ
-
ஜோ பைடன் பதவியேற்பு விழாவில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 200 தேசிய பாதுகாப்பு படை வீரர்
-
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஐந்தாயிரத்து 957பேர்
-
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 40ஆயி
-
விவசாயிகள் சங்கத்தின் தலைவர்களில் நால்வரைக் கொன்று, டிரக்டர் பேரணியில் பெரும் குழப்பத்தையும், சீர்கு