கனடாவின் முக்கிய மாகாணத்தில் அமுலுக்கு வந்த புதிய தடை!

கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் வெளிப்புறங்களில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாகாண தலைவர் Jason Kenney இதுகுறித்த அறிவித்தலினை வெளியிட்டுள்ளார்.
எனினும், மாகாணத்தில தனிமையில் வாழ்பவர்கள் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள இருவருடன் கூடுவதற்கு அனுமதியளிக்கப்படும் என மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் Tyler Shandro தெளிவுப்படுத்தியுள்ளார்.
அத்துடன் மாகாணத்தால் பிற நடவடிக்கைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தேவையான இடங்களில் கட்டாய சமூக இடைவெளி மற்றும் அனைத்து உட்புற பொது இடங்களிலும் கட்டாயமாக முகக் கவசம் அணிவது அமல்படுத்துதல் மற்றும் நூலகங்கள், அருங்காட்சியகங்கள், கேசினோக்கள் மற்றும் பிற பொழுதுபோக்கு மையங்கள் எதிர்வரும் 13ஆம் திகதி முதல் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் மாகாணம் முழுவதும் குறைந்தபட்சம் நான்கு வாரங்கள் வரை நடைமுறையில் இருக்கும் என Jason Kenney தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.