கமலா ஹாரிசுக்கு வாழ்த்து தெரிவித்து தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்
In இந்தியா November 9, 2020 8:49 am GMT 0 Comments 1449 by : Yuganthini

அமெரிக்க துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிசுக்கு வாழ்த்து தெரிவித்து, தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழில் கடிதம் அனுப்பியுள்ளார்.
குறித்த கடிதம் தொடர்பாக முகப்புத்தக பதிவில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது, “கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதி என்பதோடு, தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்மணி என்பது தமிழக மக்கள் அனைவரையும் பெருமிதம் அடைய வைக்கும் இனிய செய்தி.
ஒரு தமிழ்ப்பெண், அமெரிக்காவையும் ஆளத் தகுதி படைத்தவர் என்பதை கமலா ஹாரிசின் கண்ணோட்டமும், கடின உழைப்பும் மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறது.
அவரது ஆட்சிக் காலம், அமெரிக்காவுக்கு மேலும் புகழ் சேர்த்து, தமிழர் தம் பாரம்பரியப் பெருமையை உலகுக்குப் பறை சாற்றுவதாக அமையட்டும்” என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.