கமல்ஹாசன், சீமானை மக்கள் இனிமேல் நம்பமாட்டார்கள்: தமிழிசை
In இந்தியா May 4, 2019 8:12 am GMT 0 Comments 2507 by : Yuganthini

மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை மக்கள் இனிமேல் நம்பமாட்டார்களென பா.ஜ.க.வின் தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் குறிப்பிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நேற்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தபோதே தமிழிசை இதனை குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் நம்பிக்கையினை பெறுவதற்கு, ஆழமான மக்கள் சிந்தனை, அமைப்பு ரீதியான கடுமையான உழைப்பு, தலைவராக மக்கள் ஏற்றுக்கொள்வதற்கான தன்மை என்பன அடிப்படை காரணங்களாக இருக்க வேண்டும் எனவும், அந்த அடிப்படையில் மக்கள் இவர்களை இனிமேல் நம்ப தயாராக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் புதிய கட்சிகள் தோற்றம் பெறுகையில் எப்போதுமே ஒரு சலசலப்பு இருக்கும் எனவும் அவ்வாறான ஒரு சலசலப்பே கமல்ஹாசன், சீமான் ஆகியோருக்கு தற்போது இருப்பதாகவும் தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு ஆரம்பத்தில் வேகமாக இருக்கும் இவர்கள், காலப்போக்கில் சலித்துப்போய் அமர்ந்துவிடுவார்களென அவர் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வின் தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் 353 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்
-
தமிழர்களுக்கு பொதுசன வாக்கெடுப்பு தேவையென ஐ.நா., அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவிற்குச
-
சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கல்வி அமைச்சர் பேராசியர் ஜீ.எல்.பீரிஸிற்கு கொரோனா வைரஸ்
-
ஏழை நாடுகளுக்கு இலாப நோக்கற்ற அடிப்படையில் 40 மில்லியன் வரை கொவிட்-19 தடுப்பூசி அளவுகளை வழங்குவதாக ஃ
-
அண்மைய நாட்களில் கொவிட்-19 தொற்றுகள் அதிகரித்ததைத் தொடர்ந்து டுபாய் அதிகாரிகள் அருந்தகங்கள் மற்றும்
-
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவு
-
பிக் பேஷ் ரி-20 தொடரின் 50ஆவது லீக் போட்டியில், பெர்த் ஸ்கொர்சர்ஸ் அணி 11 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 49 ஆயிரத்து 261 ஆக உயர்ந்துள்ளது.
-
திருகோணமலைக்கு சீமெந்து ஏற்றிக்கொண்டு சென்ற எம்.வி. யூரோசுன் (MV Eurosun) என்ற கப்பல் பாறை ஒன்றுடன்
-
கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு ஜப்பானில் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அம