கமெரூனில் கோர விபத்து: 37 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்!

கமெரூனின் மேற்கு கிராமமான நேமலில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 37 பேர் உயிரிழந்ததுடன் 18 பேர் படுகாயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
70 ஆசனங்கள் கொண்ட இந்தப் பேருந்து, மேற்கு நகரமான ஃபோம்பனில் இருந்து தலைநகர் யவுண்டேவுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்று கொண்டிருந்தபோது, பாரவூர்தி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பேருந்தில் பயணித்தவர்களில் பெரும்பாலோர் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக பயணித்தவர்கள் என குறிப்பிடப்படுகிறது.
இந்தப் பேருந்தில் 60இற்கும் மேற்பட்டவர்கள் பயணித்துள்ளதுடன் மீட்பு நடவடிக்கை இடம்பெற்ற நிலையில், பலர் படுகாயமடைந்துள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.