கம்பஹாவில் பொது சுகாதார பரிசோதகர்கள் சிலர் தனிமைப்படுத்தப்பட்டனர்
In இலங்கை December 7, 2020 7:52 am GMT 0 Comments 1540 by : Jeyachandran Vithushan

கம்பஹா மாவட்டத்தில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட பொது சுகாதார பயிற்சி பரிசோதகர்கள் சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
வத்தளை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால், பயிற்சி பொது சுகாதார பரிசோதகர்கள 50 பேர், கடமைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கடமையில் ஈடுபட்டிருந்த அவர்களில் ஒருவருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்தே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அவர்களில் 21 பேர்நய்வல வெயாங்கொடை பகுதியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களிலும் 28 பேர் பயிற்சி நிலையங்களிலேயே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.