கம்பஹா மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 144 கொரோனா நோயாளர்கள் பதிவு
In இலங்கை January 3, 2021 8:40 am GMT 0 Comments 1464 by : Dhackshala

நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட 515 கொரோனா நோயாளர்களில் அதிகமானோர் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.
அதன்படி கம்பஹா மாவட்டத்தில் 144 கொரோனா நோயாளர்கள் பதிவானதாக கொவிட்-19 கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக கண்டி மாவட்டத்தில் 96 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையில் நேற்றையதினம் சடுதியான வீழ்ச்சியை காண முடிகிறது.
அதன்படி கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 47 நோயாளர்களே பதிவாகியுள்ளனர்.
இதேநேரம், பொலனறுவை மாவட்டத்தில் 43 பேரும் குருநாகல் மற்றும் மாத்தறை மாவட்டங்களில் தலா 33 பேரும் இரத்தினபுரி மாவட்டத்தில் 31 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்தோடு, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 22 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 12 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 11 பேரும் காலி மாவட்டத்தில் 9 பேரும் புத்தளம் மாவட்டத்தில் 7 பேரும் மாத்தளை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தலா 4 பேரும் பதிவாகியுள்ளனர்.
மேலும் திருகோணமலை மாவட்டத்தில் 3 பேரும் மட்டக்களப்பு, மன்னார் மற்றும் மொனராகலை மாவட்டங்களில் தலா ஒவ்வொருவரும் அடையாளம் காணப்பட்டனர் என கொவிட்-19 கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.