கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கிய மிகப்பெரிய லத்தீன் அமெரிக்க நாடாக மாறியது அர்ஜென்டினா!

அர்ஜென்டினா கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கிய மிகப்பெரிய லத்தீன் அமெரிக்க நாடாக மாறியுள்ளது.
நேற்று (புதன்கிழமை) அதிகாலை 4 மணிக்குப் பிறகு இதன் முடிவு அறிவிக்கப்பட்டதால், ப்யூனோஸ் அயர்ஸின் நியோகிளாசிக்கல் காங்கிரஸின் அரண்மனைக்கு வெளியே விழிப்புடன் இருந்த உற்சாகமான சார்பு தேர்வு பிரச்சாரகர்கள் கொண்டாட்டத்தில் திளைத்தனர்.
பெண்கள் மகிழ்ச்சியுடன் கத்தினார்கள், தங்கள் நண்பர்களை இறுக்கமாக அணைத்துக்கொண்டு, பரவசத்தில் குதித்தார்கள். பலர் ஆனந்தக் கண்ணீர் விட்டார்கள்.
அர்ஜென்டினா நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் சபையில், பெண்கள் கர்ப்பமாகிய 14 வாரங்களுக்குள் செய்யப்படும் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்குவதற்கான சட்டமூலம் நிறைவேறியது.
தொடர்ச்சியாக நடத்த விவாதத்துக்கு பிறகு நடந்த வாக்கெடுப்பில் 38 செனட் உறுப்பினர்கள் இந்த சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். 29பேர் இதற்கு எதிராக வாக்களித்தனர். இதைத் தொடர்ந்து இந்த சட்டமூலம் வெற்றிகரமாக நிறைவேறியது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.