கருணை காட்டுங்கள் என கெஞ்சிய இளம்பெண்!
In இங்கிலாந்து April 20, 2019 5:25 am GMT 0 Comments 2084 by : Benitlas

பிரித்தானியாவில் நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் கொள்ளையில் ஈடுபட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தில் தனது பிரசவம் குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.
சாண்டிலி ரிலே என்ற இளம்பெண் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் டுiஎநசிழழட-ல் உள்ள ஒரு இடத்தில் பணத்தை கொள்ளையடித்ததாக கைது செய்யப்பட்டார்.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அவரை பொலிஸார் கைது செய்திருந்தனர். பின்னர் ரிலே மீதான வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
இதன்போது ரிலே கர்ப்பமானார், தற்போது நிறைமாத கர்ப்பிணியாகவுள்ள அவருக்கு சில வாரங்களில் குழந்தை பிறக்கவுள்ளது.
இந்நிலையில் நீதிமன்றத்தில் ரிலே ஆஜரான நிலையில் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் சிறைக்கு செல்ல வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
எனினும், சிறைக்கு உடனே சென்றால் அங்கேயே தனக்கு குழந்தை பிறந்துவிடும், சிறையில் குழந்தை பெற்றால் அது நன்றாக இருக்காது.
இதன்காரணமாக குழந்தை பிறக்கும் வரை தன்னை சிறையில் அடைக்க வேண்டாம், இந்த விடயத்தில் கொஞ்சம் கருணை காட்டுங்கள் என அழுதபடி ரிலே நீதிமன்றத்தில் கெஞ்சியுள்ளார்.
எனினும் அவரது கோரிக்கையினை நிராகரித்துள்ள நீதிமன்றம், சிறையிலடிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.