கருத்துச்சுதந்திரம் சமூக வலைதள பங்கங்களின் உரிமையாளர்களால் தீர்மானிக்கப்படக்கூடாது: ஜேர்மனி அதிபர்

கருத்துச்சுதந்திரம் என்பது சமூக வலைதள பங்கங்களின் உரிமையாளர்களால் தீர்மானிக்கப்படக்கூடாது என ஜேர்மனி அதிபர் அங்கலா மேர்க்கல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்ற கட்டட தாக்குதலின் போது வன்முறையை தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக கூறி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தை டுவிட்டர் நிறுவனம் நிரந்தரமாக தடை செய்தது.
இந்த நிலையில் ட்ரம்பின் டுவிட்டர் கணக்கு மட்டும் நிரந்தரமாக மூடப்பட்டது குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து ஜேர்மனி அதிபர் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘அடிப்படை உரிமைகளில் கருத்துச்சுதந்திரம் மிகவும் முக்கியமான ஒன்று. அடிப்படை உரிமைகள் சட்டத்தின் மூலமாகவும், வரையறுக்கப்பட்ட சட்ட கட்டமைப்புகள் மூலமாகவும் மட்டுமே நடைபெற வேண்டும். கருத்துச்சுதந்திரம் என்பது சமூக வலைதள பங்கங்களின் உரிமையாளர்களால் தீர்மானிக்கப்படக்கூடாது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் டுவிட்டர் பக்கம் நிரந்தரமாக முடக்கப்பட்டது பிரச்சனைக்குரிய விடயம்’ என கூறினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.