கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டால் நாடு அழிவை நோக்கிச் செல்லும் – ஐக்கிய மக்கள் சக்தி
In இலங்கை December 19, 2020 9:14 am GMT 0 Comments 1808 by : Jeyachandran Vithushan

ஜனநாயக நாட்டில் மக்களின் கருத்து சுதந்திரத்திற்கான உரிமை மீறப்பட்டால் அது நாட்டின் அழிவுக்கு வழிவகுக்கும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பக்கீர் மார்க்கர், பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் தெளிவில்லாமல் இருப்பதாக குற்றம்சாட்டினார்.
ஆட்சியாளர்களிடமும் குறைபாடுகள் இருக்கலாம் என குறிப்பிட்ட அவர் தவறான முடிவுகளை விமர்சிக்கும் மக்களின் உரிமையும் இதன்போது மதிக்கப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு தனிமைப்படுத்தல் பகுதிகளில் வசிப்பவர்களின் கவலைகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தத் தவறிவிட்டது என்றும் இம்தியாஸ் பக்கீர் மார்க்கர் தெரிவித்தார்.
இந்த பகுதிகளில் வசிப்பவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துவிட்டதாகவும், அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.