கர்ணன் திரைப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகுகிறது!
In சினிமா February 18, 2021 3:55 am GMT 0 Comments 1100 by : Krushnamoorthy Dushanthini

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படத்தின் முதல் பாடல் இன்று (வியாழக்கிழமை) வெளியாகியுள்ளது. இரவு 8 மணிக்கு “கண்டா வரச்சொல்லுங்க” என்ற பாடல் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். இதில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார்.
மேலும் யோகிபாபு, லால், கௌரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பாக தாணு தயாரித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறன. சமீபத்தில், இப்படத்தின் வெளியீட்டு திகதியுடன் கூடிய, பெர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.