கிழக்கில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது
In ஆசிரியர் தெரிவு April 29, 2019 2:23 am GMT 0 Comments 2753 by : Yuganthini
கல்முனை, சம்மாந்துறை, சவளக்கடை ஆகிய பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதிகளுக்கு நேற்று மாலை 5 மணிமுதல் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்து.
ஆனால் நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு நாளும் அமுல்படுத்தப்பட்டு வந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் ஏனைய பகுதிகளில் நேற்று தளர்த்தப்பட்டிருந்தது.
கல்முனை, சாய்ந்தமருது பிரதேசத்தில் நேற்று முன்தினம் இரவு நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 15ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் ஆறு ஆண்களும் மூன்று பெண்களும் ஆறு சிறுவர்களும் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 4 தீவிரவாதிகள் உள்ளடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் தொடர்ச்சியாக பதற்றமான நிலைமை காணப்பட்டமையினால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நேற்று காலை 10 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு, தளர்த்தப்பட்டது. பின்னர் மீண்டும் மாலை 5 மணிமுதல் இன்று காலை 8 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
கொரோனா பரவலுக்கு மத்தியில் இம்முறையும் 73ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெறும் என பாதுகாப்பு செ
-
நாடாளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு கூடவ
-
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கொழும
-
யாழ். பருத்தித்துறையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (திங்கட்கிழமை) உறுதி செய்யப்பட்
-
யாழ். பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை கட்டுவது தொடர்பான செய்தியொன்று இந்த
-
தமிழகத்தில் மேலும் 551 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரதுறை அறிவித்துள்ளது. மேலும்
-
கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்
-
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் அடையாளம் காணப்பட்ட 3 கொரோனா தொற்று நோயாளிகளில் ஒருவர
-
நாட்டில் மேலும் 332 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
அமெரிக்காவிற்குள் நுழையும் முனைப்புடன் சென்ற மத்திய அமெரிக்க புகலிடக்கோரிக்கையாளர்கள் மீது குவாத்தமா