கல்முனை மாநகர சபையின் புதுவருட சத்தியப்பிரமாண நிகழ்வு
In இலங்கை January 1, 2021 9:04 am GMT 0 Comments 1311 by : Yuganthini
கல்முனை மாநகர சபை ஊழியர்களின் புதுவருட சத்தியப்பிரமாண நிகழ்வு, மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார், பிரதி ஆணையாளர் எம்.ஐ.பிர்னாஸ், பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்ஷாத் காரியப்பர், நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எம்.ஆரிப், வேலைகள் அத்தியட்சகர் வி.உதயகுமரன் உள்ளிட்ட உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது மாநகர மேயரினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதையடுத்து நாட்டுக்காக உயிர் நீத்த படை வீரர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் மாநகர ஆணையாளரின் நெறிப்படுத்தலில் ஊழியர்கள் அனைவரும் சத்தியப்பிரமாண உறுதியுரையை மேற்கொண்டனர்.
அத்துடன் மாநகர மேயர் றகீப், சுபீட்சத்தை நோக்கிய ஆண்டு எனும் தொனிப்பொருளில் பிரகடன உரையையும் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்ஷாத் காரியப்பர் கொவிட்-19 விழிப்புணர்வு தொடர்பான உரையையும் நிகழ்த்தினர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.