கல்லடி திருச்செந்தூர் நினைவாலயத்தில் சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகள்
In இலங்கை December 26, 2020 4:58 am GMT 0 Comments 1341 by : Yuganthini
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் 16ஆவது சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகள் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்றன.
சுனாமி பேரழையினால் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் நிகழ்வு, கல்லடி திருச்செந்தூர் நினைவாலயத்தில் இன்று (சனிக்கிழமை) காலை 8.55 மணியலவில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
கடந்த 2004.12.26ஆம் திகதி, கல்லடி திருச்செந்தூரில் 243 உயிர்கள் ஆழிப்பேரலையினால் காவு கொள்ளப்பட்டு, இன்றுடன் 16வருடம் நிறைவாகிறது.
இதனை முன்னிட்டு, கல்லடி திருச்செந்தூர் தூபி நிர்மாணிப்புக்குழுவின் ஏற்பாட்டில் சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், மாநகர பிரதி முதல்வர் சத்திய சீலன் மற்றும் மாநகர ஆணையாளர் எம்.தயாபரன் உள்ளிட்ட மதத்தலைவர்கள், சுனாமியினால் உயிர்நீத்தவர்களின் உறவினர்கள் என பலரும் பங்கேற்றனர்.
உயிர் இழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி மௌன அஞ்சலி செலுத்தி, தீபச்சுடர்கள் ஏற்றப்பட்டு பிரார்த்தனைகளும் இதன்போது இடம்பெற்றன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.