கல்வி நடவடிக்கைகளுக்கு குழப்பம் விளைவிப்போருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை
In Uncategorized May 8, 2019 1:54 pm GMT 0 Comments 2092 by : Litharsan

கல்வி நடவடிக்கைகளுக்கு குழப்பம் விளைவிக்கும் சில அரசியல் குழுக்கள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாதுகாப்பு தரப்பினரின் ஆலோசனைகளின் பிரகாரம் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் கடந்த திங்கட்கிழமை இரண்டாம் தவணைக்கான பாடசாலை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில் தற்போது பாடசாலைகளில் மாணவர்களின் வரவு அதிகரித்துள்ளது. எனவே பாடசாலை நடவடிக்கைகளை வழமை போன்று முன்னெடுத்து செல்லுமாறு கல்வி அமைச்சு அனைத்து பாடசாலை அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளது.
இதனிடையே, ஒரு சில குழுவினர் பாடசாலை நடவடிக்கைகளில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை தெரிவித்து வருவதாக கல்வி அமைச்சுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இந்த குழுவினர் பாடசாலைகளுக்கு வரக்கூடாது என அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அழுத்தம் பிரயோகித்தும் வருகின்றனர்.
எனவே மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருப்பவர்கள், குறுகிய அரசியல் நோக்கத்திற்காக செயற்படும் குழுக்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதன்பொருட்டு, இவ்வாறான குழுக்கள் மற்றும் தனிநபர்கள் தொடர்பாக குற்ற விசாரணை பிரிவுக்கு தகவல்களை வழங்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.