கழிவுப்பொருட்களை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வேலைத் திட்டம் ஆரம்பம்
In இலங்கை January 20, 2021 8:54 am GMT 0 Comments 1363 by : Dhackshala

உள்ளூராட்சி நிறுவனங்களினூடாக தினந்தோறும் சேகரிக்கப்படும் எரிக்கக்கூடிய கழிவுப்பொருட்களை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெரிவித்துள்ள மேல் மாகாண கழிவுப்பொருள் முகாமைத்துவ அதிகார சபையின் பணிப்பாளர் நளின் மானப்பெரும, “கொழும்பு மாநகர சபை நாளாந்தம் சுமார் 450 டொன் கழிவுப்பொருட்களை சேகரிக்கின்றது.
கரந்தியான குப்பை மேட்டிற்கு எடுத்துவரப்படும் கழிவுப்பொருட்களை பயன்படுத்தி இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு 700 டொன் கழிவுப்பொருட்களை பயன்டுத்தி 10 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். அதனை தேசிய மின்சார வலைப்பின்னலுடன் ஒன்றிணைக்க முடியும்.
இந்த திட்டத்திற்கு கொழும்பு மாநகர சபையினால் சேகரிக்கப்படும் கழிவுப்பொருட்கள் போதுமானதாக இல்லை.
மொரட்டுவ, தெஹிவளை-கல்கிஸ்சை கோட்டே, ஹோமாகம, மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ போன்ற உள்ளூராட்சி நிறுவனங்களின் குப்பைகளையும் பயன்படுதுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.
அரச தகவல் திணைக்களம்
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.