காங்கேசன்துறை கடலில் நீராடச் சென்று காணாமல்போன 2ஆவது இளைஞரின் சடலமும் கண்டெடுப்பு
In இலங்கை November 30, 2020 9:12 am GMT 0 Comments 1597 by : Yuganthini

காங்கேசன்துறை கடலில் நீராடச் சென்ற இருவர், அலையில் அடித்துச் சென்ற நிலையில் இரண்டாவது நபரின் சடலமும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காங்கேசன்துறை தல்செவன இராணுவ நட்சத்திர விடுதிக்கு அருகாமையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 1 மணியளவில் கடலில் குளித்துக்கொண்டிருந்த இரண்டு பேர், அலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.
குறித்த சம்பவத்தில் தையிட்டியைச் சேர்ந்த சிவச்சந்திரன் நிரோஜன் (வயது-19), மாசிலாமணி தவச்செல்வம் (வயது -19) என்ற இருவருமே கடலலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.
அவர்களில் சிவச்சந்திரன் நிரோஜன் என்பவரது சடலம் நேற்று மாலை 5 மணியளவில் கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில் மற்றையவரான மாசிலாமணி தவச்செல்வத்தின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த இருவரது சடலமும் பிரேத பரிசோதனைக்காக தெல்லிப்பழை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.