‘காஞ்சனா-3’ படத்தின் தணிக்கை சான்றிதழ் வெளியானது
In சினிமா April 9, 2019 5:15 pm GMT 0 Comments 1826 by : adminsrilanka

நடிகரும் இயக்குநருமான ராகவா லோரன்ஸின் இயக்கத்தில் ‘காஞ்சனா-3’ (முனி 4) திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் வெளியானது.
இத்திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அந்தவகையில் ‘காஞ்சனா-3’விற்குயு/ஏ சான்றிதழ் கிடைத்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. எனினும் படத்தில் நிறைய பயப்படுத்தும் காட்சிகள் இருப்பதால் இந்த சான்றிதழ் கிடைத்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகின்றது.
இப்படம் எதிர்வரும் 19ஆம் திகதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகவுள்ளது.
த்ரில்லர் கலந்த அக்ஸன் காட்சிகளுடன் நகைச்சுவை கலந்த திரைப்படமாக இது அமைந்துள்ளது. இத்திரைப்படத்தின் முதல் இரு பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்தே இதன் 3ஆம் பாகத்தை உருவாக்கியுள்ளனர்.
ராகவா லோரன்ஸூக்கு ஜோடியாக வேதிகா மற்றும் ஓவியா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன், கோவை சரளா, தேவதர்ஷினி, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைத்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்
-
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் அடையாளம் காணப்பட்ட 3 கொரோனா தொற்று நோயாளிகளில் ஒருவர
-
நாட்டில் மேலும் 332 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
அமெரிக்காவிற்குள் நுழையும் முனைப்புடன் சென்ற மத்திய அமெரிக்க புகலிடக்கோரிக்கையாளர்கள் மீது குவாத்தமா
-
ரஜினி மக்கள் மன்றத்தினர் அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியிலும் இணைந்து கொள்ளலாம் என்று அறி
-
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் நாளைமறுதினம்(புதன்கிழமை) பதவியேற்கவுள்ள நிலையில், தலைநகரம்
-
அடுத்த இரு வாரங்களுக்குள் மேல் மாகாணத்தில் அனைத்து தர மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பி
-
பாலாஜியின் உண்மை முகமும், மாற்றிக்கொள்ளும் குணமும் என்னை கவர்ந்தது என இயக்குனரும், நடிகருமான சேரன் த
-
நுவரெலியா – கந்தப்பளை, பார்க் தோட்டத்தில் நேற்றிரவு முதல் பெருந்தோட்டத் தொழிலாளர்களினால் மேற்க
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 45 ஆயிரத்து 820 ஆக உயர்ந்துள்ளது.