காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு நீதி கோரி ஊடக அமைப்புக்கள் போராட்டம்!
கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகித் எக்னலிகொடவுக்கு நீதிகோரி மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
ஊடக அமைப்புக்கள் இணைந்து நடத்திய இந்த ஆர்ப்பாட்டமானது மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பு காலை 10.30 மணியளவில் ஆரம்பமானது.
உழைக்கும் ஊடக தொழிற்சங்க சம்மேளனம், கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் ஆகியவை இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளரகள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் மற்றும் மட்டக்களப்பு மாநகர முதல்வர், உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது, ‘காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டும்’, ‘சர்வதேசமே பதில்சொல்’, ‘காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியராளர் எங்கே?’, ‘படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடு’ போன்ற கோசங்களை எழுப்பி நீதி கோரியுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.