காணாமல்போனோர் பணியக அங்கத்தவர் குறித்த கரிசனை!
In சிறப்புக் கட்டுரைகள் March 3, 2018 5:24 am GMT 0 Comments 2230 by : Arun Arokianathan
காணாமல் போனோர் பணியத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள ஏழு அங்கத்தவர்களில் ஒருவரான ஓய்வுபெற்ற இராணுவ ஜெனரல் மொஹாந்தி பீரிஸ் தொடர்பாக மனித உரிமை ஆர்வலர்களும் தமிழ் ஊடகங்களும் கேள்விகளை எழுப்பியுள்ளன.
இராணுவத்தின் சட்டப்பிரிவிற்கு பொறுப்பாக இருந்தவர் என்றவகையில் இலங்கை இராணுவத்தை உயர்மட்டத்தில் பிரதிநிதித்துவப் படுத்தியவர் என்பதற்கு அப்பால் போர்க்குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கும் வகையில் ஆவணங்களைத்தயார்ப்படுத்தி அறிக்கைகளை வெளியிட்டவர் என்பது அவரது நியமனம் தொடர்பான கரிசனைகளை வலுப்படுத்தியுள்ளது.
போர்க்குற்றச்சாட்டுக்கள் போன்ற பாரதூரமான குற்றச்சாட்டுக்களை எழுப்பும் போது மட்டுமன்றி மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை எழுப்புகின்றபோதும் அதனை நிராகரிக்கின்ற வகையில் அன்றேல் நியாயப்படுத்துகின்ற வகையில் பதிலளிக்கின்ற இலங்கை அரசாங்கத்தரப்பு குறிப்பாக இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் காணாமல் போனோருக்கான பணியகத்தில் உறுப்பினராக இருப்பது பாதிக்கப்பட்ட தரப்பைப் பொறுத்தவரை பிரச்சனைக்குரியதே!
பாதிக்கப்பட்ட தரப்பினர் கடந்த கால வரலாறுகளில் இருந்து பெற்றுக்கொண்ட கரிசனைகளின் அடிப்படையிலேயே தற்போதைய நியமனங்களை நோக்குவர். அவர்களது பட்டறிவுடன் தொடர்புடையதாக அது அமைந்துள்ளது. எதிர்காலம் தொடர்பாக நம்பிக்கையை பாதிக்கப்பட்ட தரப்பினர் மத்தியில் கட்டியெழுப்புவதாக இருந்தால் கடந்தகாலத்தில் செயற்பட்டதற்கு மாறாக அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமையவேண்டும்.
Your skepticism is not unwarranted, but along with those rejecting the #OMP, there are those who have been waiting for it. The OMP so far has been the best of the govt. mechanisms established to give answers. Will wait and see- what other choice really is there? (2)
— ThyagiRuwanpathirana (@ThyagiR) March 2, 2018
Military’s representative to #OMP Major General (Rtd) Mohanti Antonette Peiris was in charge of human rights judicial exchange & senior legal officer of #Army for years. Isn’t this appointment undermining trust of families of disappeared in #OMP? Cable- https://t.co/HBC6tmTq32 pic.twitter.com/UDL6erDs7A
— கரிகாலன் garikaalan (@garikaalan) March 1, 2018
Flawed Appointment process! Pres. Sirisena has chosen his counsel to head #OMP bypassing Constitutional Council; ind. experts point to confidentiality & immunity clauses in the Act compromising kind of evidence that will be presented in a war crimes court: https://t.co/8wfZlS9zFD https://t.co/BDllv6APp2
— Usha Sriskandarajah (@UshaSris) March 1, 2018
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.