கார் கடத்தல் விவகாரம்: இரு சந்தேக நபர்களை கைதுசெய்ய பொதுமக்களை நாடும் பொலிஸார்!

ரொறன்ரோ நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற ஆயுத முனையிலான கார் கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்களைத் பொலிஸார் தேடி வருகின்றனர்.
குறித்த சந்தேக நபர்களின் ஒளிப்படங்களை வெளியிட்டுள்ள பொலிஸார், இவர்கள் குறித்த தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புக் கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கடந்த 6ஆம் திகதி லோரன்ஸ் அவனியூ கிழக்கு மற்றும் டொன் மில்ஸ் வீதிப் பகுதியில், வெள்ளை நிற மேர்சிடிஸ் ரக காரை கடத்த முயற்சித்து அது பலளிக்கவில்லையெனவும், அதன்பின்னர் அதேநாள் இரவு பேயார்விவ் மோல் அமைந்துள்ள பிராந்தியத்தில், செர்ப்பட் அவனியூ கிழக்கு மற்றும் டொன் மில்ஸ் பகுதியில் சிவப்பு நிற பி.எம்.டபுள்யூ ரக கார் ஒன்றையும் திருடிச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், இதுவரை குறித்த காரை கண்டுபிடிக்க முடியாத நிலையில், பொலிஸார் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ள நிலையில் இதுவரை தொற்றினால் உயிரிழந்தவர
-
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதும் மக்களுக்கு அதனை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க
-
போராட்டத்தில் வன்முறை சூழுமானால், அரசின் திசைதிருப்பும் அரசியலுக்கு உதவியாக அமைந்துவிடும் என்பதை விவ
-
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க முன்வருமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களி
-
மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோருக்கு எழுமாறாக பரிசோதனை முன்னெடுக்கப்படும் பொலிஸார் ஊடகப்பேச்சாளர்
-
நாட்டில் மேலும் 369 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிற
-
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70ஆயிரத்தைக் க
-
வேளாண் சட்டங்களுக்கு எதிராக ட்ராக்டர் பேரணியை முன்னெடுத்துள்ள விவசாயிகள் மீது பொலிஸார் கண்ணீர்புகைக்
-
நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரது வாழ்க்கையை ஓ.டி.டி. தளங்கள் காப்பாற்றும் என நடிகை வித்யா பாலன் தெரிவ